அஜித்தின் ‘ஏகே 64’ படத்தில் ரெஜினா: மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைவு!

dinamani 2025 11 24 e5dgap5m Capture

நடிகர் அஜித்குமாரின் 64-வது படமான (AK 64) குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிப் படமான ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly)க்குப் பிறகு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்குமாரை வைத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக “ஏகே 64” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், “ஏகே 64” திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் முன்னணி நடிகையான ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version