இன்று 33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு…

3 17

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி கூரேஷ்.

அப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்தார், படம் மெகா ஹிட்டாகி அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பிறகு விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவருக்கு மகாநதி படம் தேசிய விருது வாங்கும் அளவிற்கு உயர்த்தியது. கடைசியாக கீர்த்தி சுரேஷ், ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் விஜய்யின் தெறி பட ரீமேக்கில் நடித்தார்.

இதற்கிடையில் 10 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் விஜய், த்ரிஷா என நிறைய நடிகர்கள் கலந்துகொண்டார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது.

ஒரு படத்துக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version