படப்பிடிப்பில் விபத்து… காயங்களுடன் நடிகை
இயக்குநர் பிரியதர்ஷன் நடிகை லிஸி தம்பதியின் மகள் ஆகிய கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர் மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்துள்ளார்.
அத்தோடு தற்போது ஜோஷி இயக்கத்தில் தயாராகி வரும் ஆண்டனி என்ற மலையாள படத்திலும் கல்யாணி நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் இப்படத்தில் கல்யாணி பங்கேற்கும் சில சண்டை காட்சிகள் உள்ளன. இதில் பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த சண்டை காட்சியை படமாக்கியபோது எதிர்பாராத சமயத்தில் விபத்து ஏற்பட்டு கல்யாணிக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.