மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் நடிகை அபர்ணா தாஸிற்கு இம்மாதம் திருமணம்

24 65e2fee94680e md

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் நடிகை அபர்ணா தாஸிற்கு இம்மாதம் திருமணம்

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி திருமண செய்தி வந்தது.

பின் ரோபோ ஷங்கர் மகள் திருமணம், மறைந்த நடிகர் விவேக் மகள் திருமணம் என சந்தோஷ நிகழ்வுகளாக நடந்து வந்தது. தற்போது அப்படி ஒரு நடிகையின் திருமண செய்தி தான் வந்துள்ளது.

மலையாளத்தில் பகத் பாசிலின் Njan Prakashan என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ் அதன்பிறகு விஜய்யுடன் பீஸ்ட், கவினுடன் டாடா போன்ற படங்களில் நடித்தார்.

தெலுங்கில் Adhikesava என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை அபர்ணா தாஸிற்கு தீபக் பரம்போல் என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 24ம் தேதி Vadakanchery என்ற இடத்தில் நடக்க உள்ளதாம்.

அண்மையில் மாஸ் வெற்றிப்பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இவர் நடித்துள்ளார்.

Exit mobile version