தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். அவர்களின் விவாகரத்து விவகாரம், இருவரும் அறிக்கைகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டதால் பரபரப்பானது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ரவி மோகனின் விவாகரத்து விவகாரத்தில் நடிகை குஷ்பூ, ஆர்த்தி ரவிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தற்போது வரை இருவரும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.
கணவரைப் பிரிந்த பிறகு, தன் மகன்களுடன் நேரத்தைச் செலவிட்டு வந்த ஆர்த்தி ரவி, தற்போது அந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வந்து, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.
அவர் துபாயில் நடிகை குஷ்பூ மற்றும் அவரது மகள்களான அவந்திகா, அனந்திகாவுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆர்த்தி ரவியின் மகன்கள் குஷ்பூவின் மகள்களுடன் விளையாடிய புகைப்படங்கள், அவர்கள் சென்ற இடங்கள் மற்றும் உண்ட உணவுகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயக்கம் என மாறியுள்ள நடிகர் ரவி மோகன் தனது தீபாவளியைப் பாடகி கெனிஷாவுடன் கொண்டாடினார்.
ஜி.வி. பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் சூழ்ந்திருக்க, இசையமைக்கப் பாடகி கெனிஷா “கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு” பாடலை பாடும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

