நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு எனவும், இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆனால் விக்ரமுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் பி.ஆர்.ஆ யுவராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே விக்ரம் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விக்ரமின் மேனேஜர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்
அதில் விக்ரமுக்கு இலேசான மார்பு அசெளகரியம்தான் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல் அவருக்கு மாரடைப்பு இல்லை.
இது தொடர்பான வதந்திகளை கேட்டு வேதனை அடைகிறோம். தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்று இனிமேலும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த நேரத்தில் விக்ரம் குடும்பத்திற்கு பிரைவசி தேவைப்படுகிறது.
தற்போது அவர் நலமாக உள்ளார், இன்னும் ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த தகவல் அவர் குறித்த பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விக்ரம் நலமாக இருக்கிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#vikram #heartattack
Leave a comment