ஜனநாயகன் இசை வெளியீடு முடிந்து சென்னை திரும்பிய விஜய்: விமான நிலையத்தில் கீழே விழுந்ததால் பரபரப்பு – கார் விபத்திலும் சிக்கினார்!

thalapathy vijay mobbed by fans 1766975069

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு மற்றும் சிறிய கார் விபத்தைச் சந்தித்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 9.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் குவிந்திருந்தனர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது, காரை நோக்கிச் சென்ற விஜய் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாகத் தரையில் விழுந்தார். உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு காருக்குள் அழைத்துச் சென்றனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களில், விஜய் பயணித்த கார் மீது பின்னோக்கி (Reverse) வந்த மற்றொரு கார் லேசாக மோதியது.

இந்த மோதலில் விஜய்யின் கார் இண்டிகேட்டர் (Indicator) பகுதி சேதமடைந்தது. இது ஒரு சிறிய விபத்து என்பதால் நடிகர் விஜய், அவரது ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர்களுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. எனினும், இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இறுதித் திரைப்படமான இது, ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version