நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்… இயக்குனர் யார் தெரியுமா?

4 11

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ்.

நடிகரும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.

உதயநிதி அரசியலில் முழுமையாக இறங்கியுள்ளதாக அந்த தயாரிப்பு நிறுவன பொறுப்பில் இருந்து விலக தற்போது அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி ஏற்றுள்ளார்.

சமீபத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை திரைப்படம் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் சார்பில் இன்பன் உதயநிதி தான் வெளியிட்டார்.

தற்போது இன்பன் உதயநிதி நாயகனாக களமிறங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

மாரி செல்வராஜ் இன்பன் உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு சமூக கருத்தை மையப்படுத்திய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய கூட்டணி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இதற்கு முன் மாமன்னன் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிக் கண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version