வைத்தியசாலையில் நடிகர் சிம்பு!

simbu

simbu

தென்னிந்திய திரைப்பட நடிகர் சிம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பல படங்களில் நடித்து வரும் நிலையில் காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகிய மாநாடு  திரையரங்குகளில் வெற்றியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக நடிகர் சிம்பு  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அவருக்கு செய்த PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#CINEMANEWS

Exit mobile version