Untitled 1 47 scaled
சினிமாபொழுதுபோக்கு

முடிவுக்கு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி!!

Share

ஏப்ரல் 28, 2006ம் ஆண்டு பாடகி சின்மயி தொகுத்து வழங்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். அன்று தொடங்கிய இந்நிகழ்ச்சியின் பயணம் ஜுன் 26 9வது சீசன் வரை வந்துள்ளது.

சிறியவர்களுக்கான சீசனும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. எத்தனை சீசன்கள் வந்தாலும் பார்வையாளர்கள் குறையாமல், TRPக்கு எந்த குறையும் இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பெரியவர்களுக்கான இந்த 9வது சீசனின் வெற்றியாளராக அருணா அறிவிக்கப்பட்டுள்ளார், இதனை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது 9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து வந்த Media Masons இந்த சீசனோடு விலகுகிறார்களாம். அவர்களுக்கு பதிலாக வேறொரு தயாரிப்பு நிறுவனத்துடன் சூப்பர் சிங்கர் குழு கூட்டணி அமைத்து நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

அநேகமாக Global Villagers சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரிக்கலாம் என்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...