40 வயதில் 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் தனுஷ் பட நடிகை… குவியும் வாழ்த்து

8 3

சினிமாவில் நாம் பல வருடங்களாக பார்த்து கொண்டாடிய நடிகைகள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்று செட்டில் ஆகி விடுகிறார்கள்.

அப்படி சமீப காலமாக நடிகைகள் கர்ப்பமாக இருப்பது குழந்தை பிறப்பது போன்ற சந்தோஷ செய்தியை அறிவித்து வருகிறார்கள்.

கடைசியாக பாலிவுட்டின் டாப் நாயகி கத்ரீனா கைப்-விக்கி கௌஷல் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள்.

அப்படி இன்னொரு முன்னணி நடிகை 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயம் தான் வெளியாகியுள்ளது.

இந்த நடிகை 80, 90களில் இப்போதும் நடித்துவரும் பிரபல நடிகரின் மகள், இவரும் தனது அப்பாவின் பெயரோடு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி சில படங்களே நடித்தார்.

பெரிதாக பட வெற்றி காணவில்லை, அதற்குள் காதலித்தவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

வேறுயாரும் இல்லை நடிகை சோனம் கபூர் தான், இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது 40 வயதில் சோனம் கபூர் 2வது குழந்தைக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version