சினிமா
ரீ ரிலீஸ் ஆகும் தளபதி விஜய்யின் சச்சின் படம்.. உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா

காலம் கடந்து நம் மனதில் சில திரைப்படங்கள் மட்டும் தான் நிற்கும். அப்படி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமாவை நேசிக்கும் அனைவரின் மனதில் இடம்பிடித்த படம்தான் சச்சின்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவானது. விஜய் – ஜெனிலியாவின் ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதைவிட வடிவேலு – விஜய்யின் கம்போ வேற லெவலில் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் இப்படத்தை பார்க்கும்போது புதிதாக படம் பார்ப்பது போலவே இருக்கும். 20 ஆண்டுகளுக்கு பின் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். இதற்கான அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார். இப்படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், 2005ல் வெளிவந்த இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் சச்சின் திரைப்படம் உலகளவில் ரூ. 20 கோடி அன்றைய காலகட்டத்தில் வசூல் செய்துள்ளது. ரீ ரிலீஸில் எத்தனை கோடிகளை இப்படம் வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.