சினிமா
துப்பாக்கியை கொடுத்த விஜய்க்கு துரோகம்? சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு!

முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள விஜய், தனது கடைசி படம் என தளபதி 69வது படத்தை அறிவித்தார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டது.
இந்த படம் 2025ஆம் வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனிடையே கோட் படத்தில் நடித்த போது விஜய், தனது கடைசி படமான ஜனநாயகனை அறிவித்துவிட்டார். அதே சமயம் கோட் படத்தில் சிவகார்த்திகேயனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து, இனிமேல் நீங்கதான் பார்த்துக்கணும், துப்பாக்கியை பிடிங்க சிவா என கூறுவது போன்ற காட்சியும் இருந்தது. இதனால் அடுத்த விஜய் எஸ்கே தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் எஸ்கேவின் அடுத்த படமான பராசக்தியை ரிலீஸ் செய்ய திட்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே, ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறுகின்றனர்.
இதனால் ஜனநாயகன் படத்துடன் தனது பராசக்தி படம் எக்காரணத்தை கொண்டு மோதக்கூடாது என்பதில் சிவா உறுதியோடு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்கூட்டியே படம் ரிலீசாகும் வாய்ப்புள்ளது.