11 50
சினிமாபொழுதுபோக்கு

விஜய்க்கு முரட்டு முட்டு கொடுக்கும் யூடியூப்பர்கள்..! அலறித் துடிக்கும் தயாரிப்பாளர்கள்

Share

பிரபல நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் சினேகா, லைலா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உட்பட மிகப்பெரிய நட்சத்திரபட்டாளமே நடித்திருந்தது. இதன் காரணமாக இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு பெரியளவில் வைக்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் கோட் படத்தை பற்றி வெளியான தகவல்கள், போஸ்டர்கள் என்பன ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்ட வைத்ததோடு, விஜய் தொடர்பான செய்திகளை பிரபல யூடியூப்பர்களும் எக்கச்சக்கமாக அள்ளி விட்டார்கள். ஆனால் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், இளையதளபதி விஜய்க்கு பல யூடியூப்பர்களும் முட்டுக் கொடுப்பதாக பிரபல விமர்சகர் ஒருவர் அதிரடி பேட்டி கொடுத்துள்ளார். தற்பொழுது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், விஜய்னுடைய கோட் படம் வெளியாக மூன்று மாதங்களுக்கு முன்பு அது பற்றி பல தகவல்கள் இணையதள பக்கங்களில் தெறிக்க விடப்பட்டிருந்தன. அதிலும் கோட் படம் 500 கோடி வசூல் அள்ளும்,  ஆயிரம் கோடி வசூல் அள்ளும் என எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு எந்த ஒரு சத்தத்தையும் காணவில்லை. வயிற்றுப் பிழப்புக்காக இவ்வாறான செயற்பாடுகளை பல யூடியூப்பர்கள் செய்து வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதன் தயாரிப்பாளர் சிறப்பானவராக இருக்க வேண்டும். அதன் மூலம் தான் அதில் நடிக்கும் ஹீரோவுக்கும் வரவேற்ப்பு, மரியாதை கிடைக்கும்.

மேலும் சமீபத்தில் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் வீட்டில் ரெய்டு நடந்தது. அதற்கு காரணம் புஷ்பா படத்தின் மூலம் 2000 கோடி ரூபாய் வசூல், அதில் அதிக லாபம் பெற்றதாக தாறுமாறாக தயாரிப்பாளர் பற்றிய பல செய்திகள் பரவப்பட்டன.

இதன் மூலமே புஷ்பா பட தயாரிப்பாளர்  வீட்டில் ரெய்டு நடந்தது. அதற்கு காரணம் ஒரு சில யூடியூப்பர்கள் பார்த்த வேலை தான் என தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...