சினிமா
தளபதி விஜய்க்கு கதை சொன்ன விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேனி.. விஜய் என்ன சொன்னார் தெரியமா
தளபதி விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ஐ இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
தளபதி விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசை அனைத்து இயக்குநர்களுக்கும் இருக்கும். அப்படி பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய கதைக்கு, தளபதி விஜய் ஓகே கூறியுள்ளாராம். இதனை சமீபத்திய பேட்டியில் மகிழ் திருமேனி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது “நான் விஜய் சாரிடம் மூன்ற கதைகளை கூறினேன். அந்த மூன்றுமே அவருக்கு பிடித்திருந்தது. அந்த கதையை தேர்வு செய்வது என்று தெரியாமல் அவர் குழப்பத்தில் இருந்தார். நான் ஒரு கதையை தேர்வு செய்தேன், அதற்கு அவர் ஓகே என கூறினார்.
ஆனால், அப்போது வேறொரு படத்திற்காக உதயநிதி ஸ்டாலினிடம் நான் அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். அதனால் நான் அந்த படத்திற்கு முன்னுரிமை கொடுத்தேன். விஜய் சாருக்கு கூறிய மூன்று கதைகளும் தற்போது என்னிடம் தான் இருக்கிறது” என மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இம்மாதம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.