5 17
சினிமாபொழுதுபோக்கு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. முன்னணி இயக்குனர் கூறிய தகவல்

Share

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. முன்னணி இயக்குனர் கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வர, அனிருத் இசையமைக்கிறார்.

கூலி படத்தை முடித்தபின் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளாராம். எம்.எஸ். தோனி, சூரரை போற்று, தலைவி, மாகாநட்டி போன்ற பல வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் 50 ஆண்டுகளாக சினிமாவில் ஆட்சி செய்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக அவருடைய பயோபிக் படம் எப்போது எடுக்கப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கரிடம், உங்களுக்கு யாருடைய பயோபிக்-ஐ படமாக எடுக்க வேண்டும் என சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர், “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கையை படமாக்க ஆசை” என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் இதுவரை கைகோர்த்த சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தை ஷங்கர் இயக்கினால் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...