சினிமா
வருங்கால மாமனார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஷோபிதா துலிபாலா.. வைரல் புகைப்படம்
வருங்கால மாமனார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஷோபிதா துலிபாலா.. வைரல் புகைப்படம்
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா அவரது புது காதலி சோபிதா உடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
அதை தொடர்ந்து, திருமணத்திற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி குடும்பத்தினருடன் பல சடங்குகளில் ஷோபிதா துலிபாலா ஈடுபட்டு வருகிறார்.
இதன் புகைப்படங்களையும் ஷோபிதா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. அதை தொடர்ந்து, நாக சைதன்யாவுடனும் அவரது குடும்பத்தினரிடமும் மிகவும் இணக்கமாக ஷோபிதா காணப்படுகிறார்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அவருடைய வருங்கால மாமனார் குடும்பத்தினருடன் இணைந்து ஷோபிதா துலிபாலா கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில், நாக சைத்தன்யா, நாகார்ஜுனா, அமலா உள்ளிட்ட அனைவரும் காணப்படுகின்றனர். நாக சைதன்யா மற்றும் ஷோபிதாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த திருமணத்திற்கு தெலுங்கு சினிமா துறையினர், அரசியல் பிரபலங்கள் என ஒட்டுமொத்த தெலுங்கு நட்சத்திரங்களும் திரண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.