பாலிவுட்டில் ஹீரோயினாக நுழையும் சாரா அர்ஜுன்! ஆனால் வயதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல்
நடிகை சாரா அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக தமிழில் தெய்வத்திருமகள், சைவம் போன்ற பல படங்களில் நடித்தவர். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளம் வயது ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து இருப்பார்.
சாரா அர்ஜுனுக்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ரன்வீர் சிங் ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஆதித்ய தார் இயக்கும் படத்தில் தான் ரன்வீர் ஜோடியாக சாரா நடிக்கிறார். இது பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சாராவின் வயதை குறிப்பிட்டு தான் விமர்சித்து வருகின்றனர்.
ரன்வீர் மற்றும் சாரா இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கிறது. ரன்வீர் சிங்கின் பாதி வயது தான் சாரா அர்ஜுன் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Comments are closed.