சினிமா
இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா!
இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா!
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2.
இப்படம் கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த நிலையில், அனைத்து பிரச்சனைகளையும் மீறி வெளிவந்துள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலில் இதுவரை உலகளவில் ரூ. 130 கோடியை கடந்துவிட்டதா சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியன் 2 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 250 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதே போல் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு திரையப்படங்களின் பட்ஜட்டை இணைத்தால், இதன் மதிப்பு ரூ. 350 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.