சம்பளம் வாங்காமல் நடித்த அஜித்.. விஜய் படத்திற்காக இப்படி செய்தாரா
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்பதை அறிவோம். இவர் தற்போது ரூ. 160 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ரூ. 160 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகர் அஜித், நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். அதுவும் விஜய்யின் திரைப்படத்தில்.
1995ஆம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய், அஜித் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் கேமியோ ரோலில் விஜய்யின் நண்பனாக நடித்திருப்பார் அஜித்.
ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்த அஜித் இப்படத்திற்கான சம்பளம் என ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என இயக்குனர் ஜானகி சௌந்தர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தங்கள் மேல் அஜித் வைத்திருந்த நட்பின் காரணமாக தான் இந்த செயலை அஜித் செய்தார் என்றும், அதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.