tamilni 428 scaled
சினிமாபொழுதுபோக்கு

திரிஷாவுக்காக 25 லட்சம் தாரேன்! சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பேன்!

Share

திரிஷாவுக்காக 25 லட்சம் தாரேன்! சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பேன்!

நடிகை திரிஷா பற்றி சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சையாக பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா கடும் கோபமாக பதிலடி கொடுத்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார். அதனால் மன்சூர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் திரிஷா எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில் த்ரிஷா பற்றி மோசமாக பேசி இருந்தார். ஒரு எம் எல் ஏ த்ரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததாகவும், அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும் அந்த நபர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பில் நடிகர் சேரன் நடிகர்கள் பற்றி தவறாக பேசியதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கூறி டுவிட் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நபருக்கு சினிமா துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக திரிஷா ட்விட்டரில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார். “பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது.

நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்” என த்ரிஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...