tamilni 298 scaled
சினிமாபொழுதுபோக்கு

அதிமுகவில் கெளதமி.. கமல் போட்டியிடும் தொகுதியில் களமிறக்க திட்டமா?

Share

அதிமுகவில் கெளதமி.. கமல் போட்டியிடும் தொகுதியில் களமிறக்க திட்டமா?

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு கட்சியில் உள்ள பிரமுகர் இன்னொரு கட்சிக்கு தாவி வருவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் பாஜகவில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகிய நடிகை கௌதமி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் சேர்ந்து உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு ஜெயலலிதா மீது நல்ல மரியாதை உண்டு என்றும் அவர் துணிச்சலாக எந்த ஒரு முடிவையும் எடுப்பார் என்றும் அது மட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவை கட்டுக்கோப்பாக எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்றும் அதனால் தான் அவருடைய கட்சியில் இணைந்தேன் என்றும் கௌதமி பேட்டி அளித்துள்ளார்.

முன்னதாக பாஜகவில் இருந்த போது அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி வாய்ப்பு கேட்டிருந்ததாகவும் ஆனால் அண்ணாமலை அவருக்கு வாய்ப்பு கொடுக்காததால் பாஜக மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி நில மோசடி வழக்கில் பாஜக தனக்கு உதவவில்லை என்ற அதிருப்தியில் இருந்த கௌதமி ஒரு கட்டத்தில் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ள கௌதமிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக அதிமுக தரப்பில் இருந்து உறுதி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள், அந்த தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகவும் அதற்கு கௌதமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே திமுக கூட்டணியில் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் கௌதமி போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 691c8fc6d2dda
சினிமாபொழுதுபோக்கு

நடிகை மான்யா ஆனந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ‘போலிக் கமிட்மென்ட் அழைப்புகள் என் பெயரில் வரவில்லை’ – தனுஷின் மேனேஜர் அறிக்கை!

நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் (Sreyas) பெயரில் பட வாய்ப்புக்காகக் கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) கேட்டதாகச் சீரியல்...

lights on. camera rolling. shoot starts today for project no.7.featuring the elegant and ench
சினிமாபொழுதுபோக்கு

லோகா படத்தின் நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் புதுப் படம் ஆரம்பம் – SR பிரபு தயாரிப்பில் பெண்கள் மையக் கதை!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த மலையாளத் திரைப்படமான ‘லோகா’ (Loka), கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி...

MediaFile 1 8
சினிமாபொழுதுபோக்கு

ரோல்ஸ் ரோய்ஸ் கார்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அளித்த விலையுயர்ந்த பிறந்தநாள் பரிசு!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா, நேற்று (நவம்பர் 18) தனது 41வது...

images 3 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய், சூர்யாவின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியாகிறது! – ரசிகர்களுக்கு உற்சாகம்!

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’...