tamilni 18 scaled
சினிமாபொழுதுபோக்கு

மாயாவை பிக்பாஸ் டைட்டில் அடிக்க வைக்க இப்படி எல்லாம் வேலை நடக்குதா?

Share

மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும் மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது. மாயா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என பிரபல பாடகி சுசித்ரா தொடர்ந்து அவர் மேல் தாக்குதல் தொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயாவுக்கு ரசிகர்களை விட விமர்சகர்கள்தான் அதிகம். ஆனாலும் தொடர்ந்து மாயா பிக்பாஸ் வீட்டுக்குள் நீடித்து வருகிறார். அவர் செய்யும் சில சேட்டைகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதே இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எப்படியோ 90 நாட்களை மாயா பிக்பாஸ் வீட்டில் கடந்துவிட்டார். இன்னும் இரண்டு வாரங்களைக் கடந்தால் அவர் பிக்பாஸ் வின்னர் ஆவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே மாயாவை எப்படியாவது வின்னர் ஆக்கிவிடவேண்டும் என வேலைகள் நடப்பதாக தெரிகிறது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சில பக்கங்களை மாயா ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு மாயாவுக்கு ஆதரவாக போஸ்ட் போட சொல்லி கேட்டுள்ளனர். மேலும் அதற்காக பணம் தரவும் தயாராக இருப்பதாக பேரம் பேசியுள்ளனர். இது சம்மந்தமான பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

Share
தொடர்புடையது
5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...

2 20
சினிமாபொழுதுபோக்கு

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...