போலீஸ் நிலையம் சென்ற சீரியல் நடிகை… பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கும் கணவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதனையடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தொடர்ந்து சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
அந்தவகையில் ஏற்கனவே மாகாபா ஆனந்த் உட்பட ஒரு சிலரின் பெயர்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமோர் போட்டியாளரின் பெயர் வெளியாகி இருக்கின்றது. அதாவது சீரியல் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ரச்சிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
சமீபகாலமாக ரச்சிதாவிற்கும், தினேஷிற்கும் இடையில் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தினேஷ் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவலானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது. மேலும் கடந்த மாதம் தினேஷ் மேல் ரச்சிதா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்திருந்தமை பரபரப்பாக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.