சினிமா
காவல் அதிகாரியின் காரை காலால் எட்டி உதைத்த நடிகை !
காவல் அதிகாரியின் காரை காலால் எட்டி உதைத்த நடிகை !
பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி ‘தேவி 2’, ‘வீரமே வாகை சூடும்’, அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஜானர்லிஸ்ட் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் மாநகர போக்குவரத்து ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார்.
இங்கு கார் பார்க்கிங்கில் கார்களை நிறுத்துவது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டிம்பிள் ஹயாதியின் வருங்கால காதல் கணவர் டேவிட், ராகுல் ஹெக்டேவின் கார் மீது டிம்பிள் ஹயாதியின் காரை மோதவிட்டுள்ளார்.
மேலும், ராகுல் ஹெக்டேவின் காரை நடிகை டிம்பிள் ஹயாதி காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டிம்பிள் ஹயாதி மீது ராகுல் ஹெக்டே போலீசில் புகாரளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நடிகை டிம்பிள் ஹயாதியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை மறைக்க முடியாது என்று டிம்பிள் கூறியுள்ளார்.
#cinema
You must be logged in to post a comment Login