சினிமா
‘லியோ’ 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். சமீபத்தில் விஜய், காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்ட நிலையில் பட குழுவினர்களும் திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுமார் 7 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் காஷ்மீரில் கடும் குளிரிலும் தாங்கள் எப்படி பணிபுரிந்தோம் என்பதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில சமயம் மைனஸ் டிகிரி குளிர் இருக்கும் என்றும் அந்த குளிரிலும் நாங்கள் நடுங்கிக்கொண்டே வேலை பார்ப்போம் என்று கேமரா முதல் சமையல் வரை உள்ள துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் கடுங்குளிர் மட்டுமின்றி இடையிடையே மழையும் பெய்ததாவும் அந்த மழையிலும் கூட நாங்கள் இடைவிடாமல் வேலை செய்து கொண்டு இருந்தோம் என்றும் இந்த குழுவில் பணிபுரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் போது காஷ்மீர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
#Cinema
You must be logged in to post a comment Login