பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி என்பதும் இலங்கை சேர்ந்த ஜனனி இலங்கை தமிழ் மொழியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் 70 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்மிகளாக குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் ஜனனி, விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவர் இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனனியிடம் இது குறித்து கேட்டபோது இப்போதைக்கு என்பது கேரக்டரை வெளியே சொல்ல முடியாது என்றும் கம்பெனி சீக்ரெட் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கிறேன் என்பதை அவர் மறுக்கவில்லை என்பதால் அவர் விஜய் மகள் கேரக்டரில் தான் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அப்போது விஜய்யுடன் ஜனனி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
#cinema