நாய் இல்லாத வீடு இல்ல நாடு இல்ல.. கலக்கும் வடிவேலு பட டிரைலர்..

ezgif 3 e9728ebaeb

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடிவேலுவின் வழக்கமான காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Cinema

Exit mobile version