ரஸ்யாவில் “புஷ்பா’ திரைப்படம்

Fi0xaQaaUAA Cfu e1669930799889

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘புஷ்பா’ படம் ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று (01.12.2022) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் ‘புஷ்பா’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#cinema

 

Exit mobile version