சமையல் குறிப்புகள்

சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்

Published

on

தேவையான பொருட்கள்

அரிசி – 2 கப் (ஊற வைத்து கழுவியது)
ஸ்ப்ரிங் வெங்காயம் – 4 (நறுக்கியது)
வெங்காயத் தாள் – 1 கப் (நறுக்கியது)
பூண்டு – 10 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஸ்ப்ரிங் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து, வெங்காயத் தாள் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அஜினமோட்டோ சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பின்பு சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் அதில் கழுவிய அரிசியை போட்டு 3-4 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, 8-10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சைனீஸ் ஸ்டைல் சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!! இதனை அப்படியே அல்லது மஞ்சூரியன் கிரேவியுடன் சாப்பிடலாம்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version