வாரிசு எங்களிடம் இல்லை! – அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

wp7849047

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை. என்றாலும் விஜய் அண்ணாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று ’கலகத்தலைவன்’ சிறப்பு காட்சியில் போது கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ’அஜித்தின் ’துணிவு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம் என்றும் இந்த படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்றும் கூறினார்.

அதேபோல் ’வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த படம் வெற்றி அடைய விஜய் மற்றும் படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

விஜய்யின் ’வாரிசு’ மற்றும் அஜீத்தின் ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டு படங்களும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது என திரையுலகினர் கூறுகின்றனர்.

#Cinema

 

Exit mobile version