பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து – வெளியானது நயனின் புதிய பட அறிவிப்பு

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா!! வாய்ப்பை பயன்படுத்திய நடிகை

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா!! வாய்ப்பை பயன்படுத்திய நடிகை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ ’காக்கி சட்டை’, தனுஷ் நடித்த ’கொடி’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

நயன்தாராவின் 81வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Exit mobile version