புரமோஷனிலும் மோதும் வாரிசு – துணிவு!!

vijay ajith 759

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ’ஜில்லா’ ‘வீரம்’ படங்களை அடுத்து இரு பிரபலங்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.

அஜித், விஜய் ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் இரண்டு திரைப்படங்களுக்கும் தியேட்டர்கள் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜீத், விஜய் படங்கள் ரிலீஸ் திகதியில் தான் மோதுகின்றன என்றால் அதற்கு முன்பே புரமோஷனிலும் மோத இருப்பதாக தெரிகிறது. அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் சில்லா சில்லா என்ற பாடல் வரும் நவம்பர் 14 அல்லது 16 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் நவம்பர் 16-ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இரண்டு படங்களின் பாடல்களும் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு பாடல்களையும் பாடியது அனிருத் என்பதும் ஒரு ஒற்றுமை ஆகும்.

#Cinema

Exit mobile version