மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் மோதும் விஜய் சேதுபதி!

ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் மோதிய நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ’பேட்ட’, உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’, தளபதி விஜயின் ’மாஸ்டர்’ மற்றும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ ஆகிய திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இதுவரை வெளியான அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் ஆகியமை குறிப்பிடத்தக்கது.

ezgif 2 e16f5716bb

இந்த நிலையில் ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் ஆகியோரைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தேசிய விருது பெற்ற ’காக்கா முட்டை’ என்ற படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#Cinema

Exit mobile version