பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக நேற்று மும்பையில் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்ட புரமோஷன் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும் இதில் மணிரத்னம், ஏஆர் ரகுமான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் மும்பை புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#trisha #Arrahman