விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.
அஜித் நடிக்கும் புதிய படத்தில் மாஸ் காட்டும் வில்லன் நடிகர் நிச்சயம் இருப்பார்” என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார்.
அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
#Ajith #Gowthamvasudhevamenan