நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித் பைக் பயணம் செய்வதை அறிந்த அந்த பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் அவரை பைக்கில் சென்று பார்க்க முயற்சித்தனர்.
அப்போது ஒரு கட்டத்தில் அவர்கள் அஜித்தை பார்த்த போது ’உங்களை தான் நாங்கள் மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூற அதற்கு அஜித் ’’நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க’ என்று கேட்க அதற்கு அந்த இளைஞர்கள், சும்மா உங்களை பார்க்க தான் என்று கூறுகிறார்கள்.
அதன் பிறகு அஜித் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#Ajith