தேவிஸ்ரீபிரசாத் (42 வயது) தாகும் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இது குறித்து நடிகை பூஜிதா விளக்கமளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், ‘நானும் தேவிஸ்ரீபிரசாத்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்றும் இது போன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவருடன் நான் டேட்டிங் கூட சென்றதில்லை என்றும் தற்போது வரை நான் சிங்கிளாக தான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து தேவிபிரசாத் – பூஜிதா திருமண குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Cinema #Devisriprashath
1 Comment