அழகுக் குறிப்புகள்
பாதங்களை அழகாக வைத்திருக்க வேண்டுமா? இதோ சில எளிய குறிப்புகள் !
பொதுவாக முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம்.
பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது
இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அதற்கு ஒரு சில எளிய வழிகள் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் அழுக்குகளை நீக்கி, பாதக் கிருமிகளை ஒழிக்கும்.
- தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.
- பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
- உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மின்னும்.
- பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
#Feetcare #Beautytips
You must be logged in to post a comment Login