மலையாள படத்தில் நடத்த விஜய் சேதுபதி ! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

’19(1)(a)’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ’19(1)(a)’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விரைவில் இப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Vijaysethupathi #NithyaMenon #Cinema

FXy9HR5aAAECyK6
Exit mobile version