வரலட்சுமிக்கு கொரோனாவா? நம்பவே முடியவில்லை!

v 2

சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வீட்டிலிருந்து வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் வரலட்சுமி தற்போது அவரும் அவருடைய செல்ல நாய்க்குட்டியும் ஆட்டம் போடும் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ராதிகா உள்பட பலர் லைக் செய்துள்ள நிலையில் உண்மையில் இந்த வீடியோவை பார்த்தால் வரலட்சுமிக்கு கொரோனா என்று யாரும் நம்ப மாட்டார்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ் அதிகம் பதிவாகி வருகிறது.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#Varalakshmi #Corona

 

 

Exit mobile version