de4fd9809a1359e0aa7081a2cf2322a1
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா! எப்படி செய்யலாம்?

Share

ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் எளியமுறையில் செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

  • பரோட்டா – 2
  • முட்டை – 1
  • வெங்காயம் – 2
  • எண்ணெய் – 4 ஸ்பூன்
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு – 8 பல்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
  • தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:

  • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.
  •  கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கி நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் தக்காளியை சேர்த்து சேர்த்து கொள்ளவும்.
  •  தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி  அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.
  • அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கி 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...