கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்த நிலையில் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றிருந்த நிலையில் நேற்றைய முந்தினம் ஹனிமூன் முடிந்து நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே நயன்தாரா படப்பிடிப்பிற்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா கலந்து கொண்டார் என்றும் 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஒருசில ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாடல் காட்சிக்காக ஷாருக்கானுடன் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் தவிர ’கோல்டு’ ’இறைவன்’ ’காட்பாதர்’ மற்றும் ’கனெக்ட்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#CinemaNews
Leave a comment