தமிழில் மதராச பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் எமிஜாக்சன்.
இவர் தமிழ் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து ரசிகர் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.
இவர் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் மலர்ந்த காதலையும் முறித்தார்.
தொடர்ந்து லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை காதலித்து திருமணத்தை நிச்சயம் செய்த நிலையில் கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பிறகு ஜார்ஜை விட்டும் பிரிந்தார்.
இந்நிலையில் நான்காவதாக சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சனுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவியது. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது.
முதல் முறையாக எமிஜாக்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
தற்போது இது சமூகவலைத்தளங்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews