அனிருத்துடன் திருமணம்? – ஜொனிதா அதிரடி

இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என பாடகி ஜொனிதா காந்தி தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பலரின் படங்களுக்கு இசையமைத்து தொடர்ந்து இசையமைத்து வருபவர் அனிருத்.

தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு, இந்தி படங்களிலும் அனிருத் இசையமைத்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

அண்மையில் வெளியான ’விக்ரம்’ திரைப்படத்தில் அனிருத்தின் பின்னணி இசை மிகப்பெருமளவில் பேசப்பட்டது. அனிருத் இசையமைக்கும் படங்களில் பாடகி ஜொனிதா காந்தி தொடர்ச்சியாக பாடி வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே. இதுவரை அனிருத் கம்போஸ் செய்த ஐந்து பாடல்களை ஜொனிதா காந்தி பாடி உள்ளார். குறிப்பாக அனிருத்துடன் அவர் பாடிய ’அரபிக்குத்து’ பாடல் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே, அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் காதலித்து வருவதாகவும் டேட்டிங்கில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது அனிருத்தை திருமணம் செய்துகொள்ள சம்மதம் என தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.

அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஜொனிதா காந்தியிடம் ‘ரன்வீர்சிங், சூர்யா, அனிருத் ஆகிய மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ‘சூர்யா, ரன்வீர்சிங் ஆகியோர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என்று ஜொனிதா தெரிவித்துள்ளார்.

ஜொனிதா காந்தியின் இந்த பதிலை அடுத்து அனிருத் – ஜொனிதா காந்தி இருவரும் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

download 2

#CinemaNews

 

 

Exit mobile version