மிரளவைக்கும் பீஸ்ட் – கோடிகள் குவிக்கும் டப்பிங் ரைட்ஸ்
இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸூக்கு மட்டுமே சுமார் 50 கோடி ரூபா வழங்க பிரபல நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அபர்ணா தாஸ், யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவிருக்கிறது.