சருமப் பொலிவுக்கு ரோஸ் வோட்டர் ரகசியம்
ரோஜா இதழ்களில் அடங்கியுள்ள விற்றமின் சி பொதுவாக முகத்துக்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் பாதுகாப்பையும் வழங்கக்கூடியது. இந்தநிலையில் சருமப் பாதுகாப்பு ரோஸ் வோட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்க, ரோஸ் வோட்டருடன் கற்றாழை ஜெல்லை கலந்து சருமத்தில் தேய்ந்து 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க ரோஸ் வோட்டரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து உதடுகள் அழகுபெறும்.
ரோஸ்வோட்டருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.
ரோஸ் வோட்டருடன் சந்தனப்பொடி, தேன் சேர்த்து கலந்து சருமத்தில் குறிப்பாக முகத்தில் தடவினால் சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகுபெறும்.