லைக்குகளை அள்ளிக்குவிக்கும் கஸ்டடி திரைப்பட பாடல்

download 12 1 3

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி இப்படத்தின் முதல் பாடலான ‘Head up High’ பாடல் வருகிற 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கஸ்டடி படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#cinema

 

Exit mobile version