தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி குறித்து மீண்டும் ஒரு பரபரப்பான காதல் கிசுகிசு பரவி வருகிறது.
மீனாட்சி சவுத்ரி, தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவரும், நாகார்ஜூனா குடும்ப உறவினரும் நடிகருமான சுஷாந்த் உடன் காதலில் இருப்பதாக மீண்டும் ஒருமுறை கிசுகிசு பரவி வருகிறது.
இந்தக் கிசுகிசு குறித்து நடிகை தரப்பில், “எங்களுக்குள் காதல் இல்லை” என மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி சவுத்ரி ஏற்கெனவே இதுபோன்ற வதந்திகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்னைப் பற்றி மாதம் ஒரு கிசுகிசு பரவுகிறது எனக் கோபமாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இளம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக இருக்கும் மீனாட்சி சவுத்ரியின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்துத் திரையுலகில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.