பிரம்மாண்டத்தின் உச்சமாகத் திகழும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக்கி வரும் வாரணாசி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் ஒரு பிரம்மாண்டமான விண்கல் (Meteorite) பூமியை நோக்கி வந்து விழுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது ஒரு சாகசப் பயணம் அல்லது அறிவியல் புனைவு (Sci-fi Adventure) பாணியிலான படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழாவிற்காக மட்டுமே சுமார் 30 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ஆரம்பக் கட்ட அறிவிப்பிற்கே இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகேஷ் பாபுவுடன் இணைந்து உலக அழகி பிரியங்கா சோப்ரா மற்றும் பல சர்வதேச முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
ராஜமௌலியின் முந்தைய படங்களான ‘பாகுபலி’ மற்றும் ‘RRR’ போன்றே, இந்தப் படமும் இந்திய சினிமாவின் எல்லைகளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

